Success stories
Fight for right cause for save the world. Read stories

திருவாதிரை தீப வழிபாடு

“ஒவ்வொரு மாதமும் சிவாலயங்களில் திருவாதிரை தீபம் ஏற்றி கர்ம வினைகளை நீக்குவோம்”

வழிபாட்டின் முக்கியத்துவம்: தமிழ் சனாதன மரபில், ஒவ்வொரு மாதமும் வரும் திருவாதிரை நட்சத்திர தினத்தில் சிவபெருமானுக்கு சிறப்பு வழிபாடு செய்வது தலைமுறை தலைமுறையாக கடைப்பிடிக்கப்படும் வழக்கமாகும். குறிப்பாக, இந்த தினத்தில் தீபம் ஏற்றுதல் என்பது ஆன்மீக வாழ்வில் சிறந்த புண்ணிய வழியாகக் கருதப்படுகிறது. இது தீவினை (பாவ வினைகள்) கரைய உதவுகிறது.

துன்பம் தீர்க்கும் தீபம்

 

(தீவினை தீரும் தீபம்):தீவினை தீர” என்பது மனிதன் தனது வாழ்நாளில் செய்த பாவங்களின் விளைவுகள் நீங்குவதை குறிக்கிறது.

இவை அனைத்தும் இறைவனின் அருளால் சுத்திகரிக்கப்படுகின்றன என்பதே இதன் உள்ளார்ந்த பொருள்.

ஒவ்வொரு மாதமும் வரும் திருவாதிரை தினத்தில் தீபம் ஏற்றுவது, அற்புதமான புண்ணிய பலன் தரும் செயல் எனப் பரவலாக நம்பப்படுகிறது.

வேண்டுகோள்:எனவே, தமிழ்நாடு கோவில் பயண இயக்கம் சார்பாக, பக்தர்களை ஒவ்வொரு மாதமும் திருவாதிரை தினத்தில் சிவாலயங்களுக்கு சென்று, தங்களால் இயன்ற அளவில் தீபம் ஏற்றி,

அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்யுமாறு பணிவுடன் வேண்டுகின்றோம்.

சிறப்பு குறிப்பு:

ஒரே சிவாலயத்தில் 1008 தீபங்கள் ஏற்றி வழிபடுதல் மிகவும் மகத்தான புண்ணியமாகக் கருதப்படுகிறது.

Scroll